பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நீர்கசிவு சரிசெய்யப்பட்டது
சத்தியமங்கலம் உக்கரம் காளிகுளம் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட நீர்க்கசிவின் காரணமாக கடந்த 1-ந் தேதி இரவு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட கசிவுநீரை மணல் மூட்டை வைத்து அடைத்தனர். பின்னர் சிமெண்டு கலவை மூலம் அடைப்பை சரிசெய்தனர்.
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
அதைத்தொடர்ந்து அன்று இரவு முதல் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று அதிகாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுப்பணித்துறை வாய்க்கால் பிரிவு அதிகாரிகள் கீழ்பவானி வாய்க்காலில் ஏதாவது நீர்க்கசிவு ஏற்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.