பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு2,200 கனஅடி தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு2,200 கனஅடி தண்ணீர் திறப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் திறப்பு

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி காலை 11 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வாய்க்காலில் திறக்கப்பட்டது. இது நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 80.76 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 494 கனஅடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.


Next Story