போலீஸ் நிலையத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்


போலீஸ் நிலையத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்
x
தினத்தந்தி 12 July 2023 1:00 AM IST (Updated: 12 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

திருவாரூர்

முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைதீர்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் முத்துப்பேட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் (பெட்டிசன் மேளா) நடந்தது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கினார். இதில் உட்கோட்டத்திற்கு உட்பட்ட முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான், களப்பால், திருக்களார் ஆகிய போலீஸ் சரகத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து புகார் மனு கொடுத்தனர்.

பல நாட்களாக தீர்க்க முடியாத பிரச்சினைகள், கொடுக்கல் வாங்கல் தொடர்பான புகார்களை போலீசாரிடம் பொதுமக்கள் வழங்கினர். மொத்தம் 20 மனுக்கள் பெறப்பட்டு 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதற்கான நடவடிக்கையை துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்கொண்டார்.

உத்தரவு

மீதம் உள்ள மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மூலம் தீர்வு காண உத்தரவிட்டார்.

இதில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ் (முத்துப்பேட்டை), மகாலட்சுமி (மகளிர் போலீஸ்), ஆனந்த பத்மநாபன் (எடையூர்), விஜயா (களப்பால்), செந்தில்குமரன் (திருக்களார்), முனியாண்டி (பெருகவாழ்ந்தான்), சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story