கிராம நிர்வாக அலுவலகம் மது பாராக மாறும் அவலம்


கிராம நிர்வாக அலுவலகம் மது பாராக மாறும் அவலம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:30 AM IST (Updated: 30 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கிராம நிர்வாக அலுவலகம் மது பாராக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதன் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருவதால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகத்துக்கு பதிலாக புதிய அலுவலக கட்டிடம் ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகில் கட்டப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தவில்லை. இதனால் அலுவலக கட்டிடம் மது பாராக மாறி வருகிறது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி அந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story