அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும்கோப்புகளுக்கு உடனடி தீர்வு; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும் கோப்புகளுக்கு உடனடி தீர்வு; அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
அந்தியூர்
அந்தியூர் பேரூராட்சிக்குட்பட்ட அத்தாணி சாலையில் ரூ.1 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம், ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் வடிகால், அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடியே 74 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் சந்தை மேம்பாடு, அந்தியூர் தவுட்டுப்பாளையம் மயானத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தகன மேடை உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ரூ.9 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் நடக்க உள்ளன.
இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். இதையடுத்து அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அந்தியூர் தாலுகா அலுவலகம் ஆகியவற்றிலும் ஆய்வு செய்த அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டார். மேலும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டு அறிந்ததுடன், அதற்கு உடனடியாக தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) விநாயக்குமார் மீனா, அந்தியூர் தாசில்தார் பெரியசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கரன், ஆனந்தன், உதவி பொறியாளர் சிவ்பிரசாத், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.