முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x

திசையன்விளையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று உவரி சோதனை சாவடி அருகே கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் அப்போது முககவசம் அணியாத 7 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அந்த வழியாக சென்ற பஸ் மற்றும் வேன்களை நிறுத்தி கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். திசையன்விளையில் புகையிலை தடுப்பு சட்ட விதிமுறையை கடைபிடிக்காத 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.


Next Story