2 லாரிகளுக்கு அபராதம்


2 லாரிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 April 2023 12:30 AM IST (Updated: 13 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே 2 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் போலீசார் மாதாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 லாரிகள் திடீரென்று போலீசாரை பார்த்ததும், மாற்றுப்பாதையில் திரும்பியது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அதில் முறையாக அனுமதி சீட்டு இல்லாமல் ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story