திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு மயில் சாவு


திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு மயில் சாவு
x
தினத்தந்தி 2 July 2023 2:30 AM IST (Updated: 2 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு மயில் இறந்தது.

திண்டுக்கல்

திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 8.25 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது. அப்போது ரெயில் என்ஜினில் ஒரு ஆண் மயில் சிக்கி இருந்தது. அதை பார்த்த ஊழியர்கள், ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று என்ஜினில் சிக்கிய மயிலை மீட்டனர். ஆனால் மயில் இறந்து இருந்தது. திண்டுக்கல் அருகே காட்டுப்பகுதியில் வந்த போது என்ஜினில் சிக்கி மயில் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மயிலின் உடலை வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story