அரூரில் பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


அரூரில் பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 29 Jun 2023 12:30 AM IST (Updated: 29 Jun 2023 5:26 PM IST)
t-max-icont-min-icon

அரூரில் பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் ஒன்றியம் அரூர் பாப்பாத்தி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்படி முதல் நாள் விநாயகர் வழிபாடும், பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதலும் நடந்தது. இதையடுத்து வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம் உள்பட பல்வேறு யாகங்கள், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.

விழாவில் நேற்று காலை தீபாராதனை, கும்பம் புறப்பாடும், காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பாப்பாத்தி அம்மன் மற்றும் காட்டு கோவில் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பங்காளிகள், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 12 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.


Next Story