ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது.
மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு துணை தலைவர் வாசுகிஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் பரிமேலழகன் வரவேற்றார்.
கூட்த்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ராஜேந்திரன், குப்புசாமி, புஷ்பாசதாசிவம் ஆகியோர் பேசுகையில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகளை மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனை கேட்டு மேற்கொள்ள வேண்டும்.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நாரியமங்கலம் முதல் கீழ்பென்னாத்தூர் பைபாஸ் சாலை வரையிலான சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதற்கு ஆணையாளர் பரிமேலழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய பொறியாளர்கள் பிரசன்னா, ரவிச்சந்திரன், வட்டார கல்வி அலுவலர் மோகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ்குமார், குழந்தைகள் நலன் புவனேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமளா நன்றி கூறினார்.