ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைவில் வழங்கவேண்டும் -வைகோ வலியுறுத்தல்


ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைவில் வழங்கவேண்டும் -வைகோ வலியுறுத்தல்
x

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படியை விரைவில் வழங்கவேண்டும் வைகோ வலியுறுத்தல்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து அ.தி.மு.க. அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. போக்குவரத்துக்கழகங்களின் கடன் மற்றும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி காலம் தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். தற்போது தி.மு.க. தலைமையிலான ஆட்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர், தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்துப்பேசி இறுதியாக கடந்த 24-ந்தேதியன்று ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக முதல்-அமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சப்படி 2015-ம் ஆண்டிலிருந்து தரப்படவில்லை. எனவே தொழிலாளர்களின் சிரமங்களை போக்குவதற்கு ஏதுவாக பஞ்சப்படி எனும் டி.ஏ.வை விரைவில் அளிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story