பழனி மாணவ-மாணவிகள் சாதனை
மாநில அளவிலான மல்யுத்த போட்டிலிய்ல வெற்றி பெற்று பழனி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். வயது, எடை அடிப்படையில் போட்டிகள் தனித்தனியாக நடந்தன. இதில் பழனியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்றனர். அதன்படி 53 கிலோ எடைப்பிரிவில் மாணவி ரோகினி, 65 கிலோ எடைப்பிரிவில் இலக்கிய கலைச்செல்வி, 73 கிலோ எடைப்பிரிவில் சங்கீதா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர்.
அதேபோல் 40 கிலோ எடைப்பிரிவில் மதுமிதா, 71 கிலோ எடைப்பிரிவில் தினேஷ்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர். 55 கிலோ எடைப்பிரிவில் தரணிநாதன், 60 கிலோ எடைப்பிரிவில் நவீன்பாரதி, 69 கிலோ எடைப்பிரிவில் ராஜேஸ்வரி ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். மேலும் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பழனி மாணவ-மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளை பயிற்சியாளர் அசாரூதீன் பாராட்டினார்.