கார் மோதி பெயிண்டர் சாவு
கார் மோதி பெயிண்டர் சாவு
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது 56). பெயிண்டரான இவர் நேற்று காலை இக்கரை நெகமம் பிரிவில் உள்ள கடை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இறைச்சி எடுக்க ரோட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுரேஷ் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விபத்தை ஏற்படுத்தியதாக நஞ்சப்பகவுண்டன்புதூரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story