கிரிக்கெட் விளையாடிய போது தவறி விழுந்த ஓவியர் சாவு
கிரிக்கெட் விளையாடிய போது தவறி விழுந்த ஓவியர் பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி அருகே புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் வீரமுத்து (வயது 28) ஓவியர். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவின்போது அப்பகுதியை சேர்ந்த சிலருடன் கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி வீரமுத்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமுத்து நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story