காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை


காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை
x

கிருஷ்ணாபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணாபுரத்தில் பாதயாத்திரை நடைபெற்றது. இந்த பாதயாத்திரைக்கு வட்டார தலைவர் மணி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான தீர்த்தராமன் பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசினார். இந்த பாதயாத்திரை முக்கிய கிராமங்கள் வழியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஜெய்சங்கர், நரேந்திரன், நிர்வாகிகள் நாகராஜ், பிரகாசம், ஞானசேகர், பழனி கவுண்டர், அக்ரி ரங்ககநாதன், காளியப்பன், முனிரத்தினம், பெருமாள், செந்தில் குமார், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பாசில்பைக், சையத்பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story