பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம்
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 322 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
பிறகு மாவட்ட வருவாய் அலகில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியிடையில் இறந்த வருவாய்த்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 4 நபர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story