தண்ணீர் பந்தல் திறப்பு


தண்ணீர் பந்தல் திறப்பு
x

தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கொடி ஏற்றுதல் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சமூக சேவகர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசிகரன் கொடி ஏற்றி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மண்டல தலைவர் தேவகுமார், மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன், தா.பழுர் ஒன்றிய செயலாளர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story