தண்ணீர் பந்தல் திறப்பு
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம்:
நடிகர் விஜய் ஆணைக்கிணங்க விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விழுப்புரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகர இளைஞரணி தலைவர் பாலவிக்னேஷ், நகர இளைஞரணி நிர்வாகிகள் ராம்குமார், பெயின்டர் ரமேஷ், பிகில் கங்கை அமரன், ஆறுமுகம் மற்றும் காணை ஒன்றியம் லோகேஷ், சரவணன், திருநாவுக்கரசு மற்றும் நகர, ஒன்றிய, கிளை மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story