மண்ணிவாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கே.கே. நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம், தமிழக குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதனையடுத்து அமைச்சர் உத்தரவின்படி மண்ணிவாக்கம் கே.கே. நகர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் புதிய நியாய விலை கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிக்குழு துணைத் தலைவர் வி.எஸ்.ஆராமுதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், காயாரம்பேடு கட்டுறவு நிலவள வங்கி இயக்குனர் எம்.டி.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை வழங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெ.வி.எஸ்.ரங்கநாதன், ஆப்பூர் சந்தானம், டி.குணா, ஒன்றிய கவுன்சிலர்கள் இளங்கோவன், தினேஷ், ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.