ஊட்டி அணி வெற்றி
ஊட்டி அணி வெற்றி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான பி மற்றும் சி டிவிஷன் கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற சி டிவிஷன் போட்டியில் கோத்தகிரியை சேர்ந்த பிரண்ட்ஸ் அணி மற்றும் ஊட்டியை சேர்ந்த எப்.சி. பேந்தர் அணி பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடி தலா 2 கோல்கள் அடித்தன. இதனால் போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் ஊட்டி சன் ஸ்போர்ட்ஸ் அணி மற்றும் கோத்தகிரி ரிவர்சைடு பள்ளி அணி பங்கேற்று விளையாடியது. இதில் ஊட்டி சன் ஸ்போர்ட்ஸ் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து நடந்த பி டிவிஷன் போட்டியில் ஊட்டியை சேர்ந்த இளைய பாரதம் அணி மற்றும் குன்னூரை சேர்ந்த ஊட்டி சிட்டி அணி பங்கேற்று விளையாடியது. இதில் ஊட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த சி டிவிஷன் போட்டியில் கோத்தகிரியை சேர்ந்த நீலகிரி எப்.சி. அணி மற்றும் ஆலன் மார்க்ஸ் அணி மோதியது. இதில் நீலகிரி எப்.சி. அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.