புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி  பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

ராணிப்பேட்டை

பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு வழிபாடு செய்தனர்.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்படும். மேலும் சனிக்கிழமையன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி திருப்பாற்கடல் பெருமாள் கோவில் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில், ரெட்டிவலம் பெருமா கோவில்களில் நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தன.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் படையலிட்டு வழிபாடு செய்தனர்.



Next Story