சுதந்திர தினத்தையொட்டிஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்


சுதந்திர தினத்தையொட்டிஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்
x

சுதந்திர தினத்தையொட்டி ஈரோட்டில் இருந்து கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட்டன.

ஈரோடு

ஈரோட்டில் இருந்து வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பஸ்களுடன் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


Next Story