விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைகிணறு டாக்டர் அம்பேத்கர் பீடம் அருகே தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, திருச்செந்தூர் ஒன்றிய இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை ஒன்றிய அமைப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், கருத்தில் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் சிவன்ராஜ், சமூக நல்லிணக்கப் பேரவை ஒன்றிய துணை அமைப்பாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story