மாவட்ட ஊராட்சி சார்பில் வீடுதோறும் தேசிய கொடியேற்ற விழிப்புணர்வு


மாவட்ட ஊராட்சி சார்பில்  வீடுதோறும் தேசிய கொடியேற்ற விழிப்புணர்வு
x

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது

தேனி

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டம் முடிந்ததும், வீடுதோறும் தேசியகொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கையில் தேசிய கொடியுடன் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு அணிவகுத்து நின்றனர். அப்போது வீடுதோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என்று அங்கு வந்திருந்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.


Next Story