முதலூரில் ராஜரத்தினம் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
முதலூரில் ராஜரத்தினம் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் ராஜரத்தினம் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் அவரது பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, சீருடை, கல்வி உபகரணங்கள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், பிரியா அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பாண்டியன் வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொணடு, மாணவ, மாணவிகளுக்கு சீருடை, கல்வி உபகரணங்கள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
400 ஆண்களுக்கு வேட்டி, சட்டை, 600 பெண்களுக்கு சேலை, 336 மாணவர்களுக்கு தலா 2 ஜோடி சீருடைகள், 33 கர்ப்பிணி பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை, மாணவர்களுக்கு உதவித்தொகை, மடிக்கணினி, விளையாட்டு உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டது.
இதில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் ரதிகலா, ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, மாவட்ட அறக்காவலர்குழு தலைவர் பார்த்திபன், முதலூர் தூயமிகாவேல் பள்ளி தாளாளர் சாந்தராஜா உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் செந்தில்நாதன், சந்திரமோகன், விஜயகுமார், கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அறக்கட்டளை நிர்வாகி நாகலிங்கம் நன்றி கூறினார்.