கார் கவிழ்ந்ததில் மூதாட்டி சாவு


கார் கவிழ்ந்ததில் மூதாட்டி சாவு
x

கார் கவிழ்ந்ததில் மூதாட்டி இறந்தார்

திருச்சி

காட்டுப்புத்தூர், ஆக.9-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தேக்கவாடியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 58). இவர், தனது மனைவி சுபத்ரா(48) மற்றும் சுபத்ராவின் தாய் சிவகாமி(70) ஆகியோருடன் ஒரு காரில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுவிட்டு மீண்டும், தேக்கவாடிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தொட்டியத்தை அடுத்த ஏலூர்ப்பட்டி அருகே திருச்சி - சேலம் சாலையில் சென்றபோது சிவக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சிவகாமி, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சுபத்ரா காட்டுப்புத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story