மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
வில்லுக்குறியில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
திங்கள்சந்தை,
வில்லுக்குறி சந்திப்பில் நேற்று முன்தினம் மதியம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், இறந்தவர் மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தைச் சேர்ந்த மணி (வயது 70) என்பதும், அவர் வில்லுக்குறி பயணிகள் நிழற் கூடத்தில் தங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும், போலீசார் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.