லாரி மோதி முதியவர் பலி


லாரி மோதி முதியவர் பலி
x

லாரி மோதி முதியவர் பலியானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி(வயது 65). விவசாயி. இவர் நேற்று மேலக்கொல்லையில் உள்ள தனது நிலத்தை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அயன்ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் மகன் இளையராஜா (28) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வீரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் உஷாராணி உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story