லாரி மோதி முதியவர் பலி
காவேரிப்பாக்கம் அருகே லாரி மோதி முதியவர் பலியானார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா தென்மாம்பாக்கம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 70). கூலி தொழிலாளி. இவர் உடல்நிலை சரியில்லாததால் நேற்று வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்ெறு கொண்டிருந்தார். காவேரிப்பாக்கம் அருகே சென்றபோது கல்கத்தா காளி கோவில் அருகே பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அவரது மகன் மணிகண்டன் (40) காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story