மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
x

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் உன்னங்குளத்தை சோ்ந்தவர் மாசாணமுத்து (வயது 65). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தாமரைசெல்வி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மாசாணமுத்து பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் உயிர் இழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story