மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் சாவு
x

மோட்டார்சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை கான்சாபுரத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 75). இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுடலையாண்டி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலையில் அவர் உயிர் இழந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story