முதியோர் உதவித் தொகை உயர்கிறது; தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்..!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, கவர்னரின் செயல்பாடுகள் மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆதரவற்ற முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவித்தொகையை ரூ. 1,000 லிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story