குழாய் உடைந்து வீணான ஒகேனக்கல் குடிநீர்
மத்தூர் அருகே குழாய் உடைந்து ஒகேனக்கல் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
கிருஷ்ணகிரி
மத்தூர்
மத்தூர் அருகே பெரிய ஜோகிப்பட்டி அம்மன் கோவில் அருகே சாலை பணியின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் 100 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்து வெளியேறியது. இதன் காரணமாக தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கொடமாண்டப்பட்டி சாம்பல்பட்டி, அந்தேரிப்பட்டி, ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து உடைந்த குழாயை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story