மார்த்தாண்டத்தில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை ;500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மார்த்தாண்டத்தில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை ;500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

மார்த்தாண்டத்தில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி

குழித்துறை,

மார்த்தாண்டத்தில் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல்

குழித்துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம் தலைமையில் நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டான்லி குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு, மார்த்தாண்டம் சந்திப்பு, வடக்கு தெரு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 9 கடைகளுக்கு மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story