யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு


யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் யானை வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சாலையை கடக்கும் யானைகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலை மற்றும் ரெயில் பாதையை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் யானைகள் சென்று வர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர்‌. ஆனால் யானைகள் அவ்வழியாக செல்லாமல் ஆபத்தான முறையில் சறுக்கி கொண்டு செல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் யானைகள் சறுக்கி சென்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கான்கிரீட் பாதையை அகற்றி யானைகள் எளிதில் சென்று வர ஏதுவாக புல்தரை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து 2-வது முறையாக நேற்று வனத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கே.என்.ஆர். பகுதியில் இருந்து பர்லியாறு வரை ஆய்வு மேற்கொண்டனர். ‌இந்த பகுதியில் யானைகள் கடந்து செல்லும் இடங்களை பார்வையிட்டனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. பின்னர் யானைகள் பாதுகாப்பாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story