விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு
விதை பரிசோதனை நிலையத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான விதை பரிசோதனை நிலையத்தை கோயம்புத்தூர் மாவட்ட விதை பரிசேதனை அலுவலர் நிர்மலா தொழில்நுட்ப ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 2021-2022-ம் ஆண்டு 2,820 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 2,837 விதை மாதிரிகள் ஆய்வு செய்து 175 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. 2022-2023-ம் ஆண்டு 2,800 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 281 மாதிரிகள் இதுவரை ஆய்வு செய்து 34 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது என்றார். மேலும் விதை பரிசோதனை நிலைய உபகரனங்கள் நல்ல நிலையில் இயங்குகிறதா? எனவும், விதைகளின் தரத்தை அறிந்திட முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தத்தன்மை மற்றும் பிற இரகக்கலப்பு ஆகியவை இங்கு பரிசோதனைகள் முறையாக ஆய்வு செய்து இப்பகுதி விவசாயிகளுக்க உரிய காலத்தில் விதைகள் கிடைத்திட பகுப்பாய்வு முடிவுகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா? எனவும் ஆய்வுசெய்தார். மேலும் அவர் கூறிய அறிவுரைகள் நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுப்பு ரகங்களான ஏ.டி.டீ-43, 45, 36, 53, 37 மற்றும் எ.எஸ்.டி-18, 16 ஆகியவற்றின் மாதிரிகளை உரியகாலத்தில் ஆய்வு முடிவுகளை வழங்கவேண்டும் எனவும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 80 சதவீதம் சாகுபடி பரப்பில் மானாவாரி பயிரான வீரிய ஒட்டு மக்காசோளம் மற்றும் பருத்தி பயிகள் சாகுபடி செய்கின்றனர். இதற்காக பயன்படுத்தப்படும் வீரியஒட்டு விதைகளின் விவசாயிகள் நேரடியாக வழங்கும் பணி விதைமாதிரிகளுக்கு தலா ரூ.80 கட்டணம் பெற்றுக்கொண்டு எவ்வித காலதாமதம் இன்றி உரியகாலத்தில் விதைப்பரிசோதனை முடிவுகளை வழங்கிட வேண்டும். நெல், உளுந்து, பயறுவகை பயிர்கள், நிலக்கடலை எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் இதர பயிர்களின் விதைமாதிரிகள் தரமானதாக விவசாயிகளுக்கு வழங்கிடவேண்டும் என அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் ராஜேந்திரன் மற்றும் தயாமதி ஆகியோர் உடனிருந்தனர்.