சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பி.சாந்தி, மாவட்ட இணை செயலாளர் ஜெ. சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ரேணுகா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கே.சாந்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசன், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் கலைச்செல்வன், பீமராவ், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். சத்துணவில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், உதவியாளர் ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகாலிங்கம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.