செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சுமலதா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கொரோனா காலக்கட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்ட எங்களை திடீரென கடந்த 31-ந் தேதி பணிநீக்கம் செய்தனர். தகுதி அடிப்படையில் நாங்கள் பணி செய்து வந்தோம். இந்த நிலையில் தற்போது மாற்றுத் தீர்வு அளிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் அந்த நடவடிக்கை தகுதி அடிப்படையில் இல்லை. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story