தமிழகத்தில் இன்று புதிதாக 36 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று புதிதாக 18 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 36 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
தமிழகத்தில் இன்று புதிதாக 18 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 36 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 28 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை.
அரியலூர், தர்மபுரி உள்பட 17 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.. 62-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை
Related Tags :
Next Story