புதிய தாசில்தார் பொறுப்பேற்பு
ஆற்காடு புதிய தாசில்தார் பொறுப்பேற்றார்.
ராணிப்பேட்டை
பட்டா மாற்றம் செய்து தர லஞ்சம் வாங்கிய வழக்கில் ஆற்காடு தாசில்தாராக இருந்த சுரேஷ், டிரைவர் பார்த்திபன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஆற்காடு புதிய தாசில்தாராக வசந்தி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் இவர் இதற்கு முன் இந்து அறநிலையத்துறையில் (கோவில் நிலம்) தாசில்தாராக இருந்து வந்தார்.
புதியதாக பொறுப்பேற்ற தாசில்தார் வசந்திக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் எஸ்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story