தென்பெண்ணையாற்றில் புதிய மேம்பாலம்; அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆலோசனை


தென்பெண்ணையாற்றில் புதிய மேம்பாலம்; அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆலோசனை
x

தென்பெண்ணையாற்றில் புதிய மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே வடக்கீரனூர், வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதியில் நேற்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பபதிவு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் யாரும் விடுபடக்கூடாது. எனவே பணியை கவனமுடன் செய்ய வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகணேஷ், செல்வதுரை, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர் அஸ்வினி செந்தில்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜய்ஆனந்த், ஊராட்சி மன்ற தலைவர்கள் இதயத்துல்லா, சிவமலை, துணைத்தலைவர்கள் பாதுஷா, ரேணு உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதையடுத்து மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் உள்ள பாலம் சேதமடைந்துள்ளதால், அங்கு புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு அங்கு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது தென்பெண்ணையாற்றில் புதிய மேம்பாலம் கட்டுவது தொடர்பாக அங்கிருந்த அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது கண்காணிப்பு பொறியாளர்கள் பழனிவேல், முரளி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story