ரூ.19 லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம்


ரூ.19 லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2023 1:30 AM IST (Updated: 12 Oct 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலையில், தட்டுப்பாட்டை போக்க ரூ.19 லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி

தேவர்சோலையில், தட்டுப்பாட்டை போக்க ரூ.19 லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதே வார்டுக்கு உட்பட்ட கன்னடபாடியில் தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளது. இவர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளது.

ஆனால், மின்சார கட்டணம் முறையாக செலுத்துவதில்லை என்றுக்கூறி அவர்களுக்கும், குடிநீர் வினியோகிப்பதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்து வந்தனர்.

புதிய திட்டம்

இந்த பிரச்சினையை தீர்க்க தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கியது. இதை கொண்டு புதிய குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி கிணறு வெட்டி குடியிருப்பு பகுதிகளுக்கு குழாய்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் நீண்டகால பிரச்சடினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது பேரூராட்சி நிர்வாகம் நேரடியாக புதிய குடிநீர் திட்டத்தை தொடங்கி உள்ளதால் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்துக்கு நன்றி என்றனர்.


Next Story