புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
விழுப்புரம் உட்கோட்ட புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பார்த்திபன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக நாமக்கல் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுரேஷ், விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று காலை விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Related Tags :
Next Story