ரூ.26 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்
ரூ.26 லட்சத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
காரைக்குடி,
கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக பாதரக்குடி ஊராட்சியில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கம் கீழ பட்டமங்கலம் ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்கொடை, கண்டரமாணிக்கம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் மற்றும் சிராவயல் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், சிராவயல் ஊராட்சி மன்ற புதியகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணம் அசோகன், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மருதுபாண்டியன், முத்தழகு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரோஜாதேவி, பாண்டி மீனா, பிரமிளா, ராமு, கண்டரமாணிக்கம் வளர்ச்சி குழு தலைவர் மணிகண்டன், கல்லல் யூனியன் ஆணையாளர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், கல்லல் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேஷ், இளைஞரணி கண்ணன், மாணவரணி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.