தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் 300 வாழைகள் சேதம்


தாளவாடி அருகே  தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்  300 வாழைகள் சேதம்
x

300 வாழைகள் சேதம்

ஈரோடு

தாளவாடி அருகே உள்ள ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட எரகனள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 45). விவசாயி. இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் யானை அருகே உள்ள வாழை தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த நாகேந்திரன் திடுக்கிட்டு் எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அங்கு யானை நின்று கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் சத்தம் போட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது. யானையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் 300 வாழைகள் சேதம் அடைந்தன.


Next Story