சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்


சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
x

சத்தியமங்கலம் அருகே 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பெற்றாா்.

ஈரோடு

பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே உள்ள சுஜில்குட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி மாரம்மாள் (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாரம்மாளுக்கு கடந்த 19-ந் தேதி மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் அங்கு வந்த மருத்துவ உதவியாளர்கள் மாரம்மாளை ஆம்புலன்சில் அழைத்துக்கொண்டு புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆஸ்பத்திரி நோக்கி புறப்பட்டனர்.

மருத்துவமனை செல்லும் முன்பே மாரம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானது. அதனால் டிரைவர் ஆம்புலன்சை ரோட்டு ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் மாரம்மாளுக்கு பிரசவம் பார்த்தார். அப்போது சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதன்பின்னர் தாயும்-சேயும் புஞ்சைபுளியம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். உரிய நேரத்தில் ஆம்புலன்சை ரோட்டு ஓரத்தில் நிறுத்தி பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரையும், டிரைவரையும் மாரம்மாளின் உறவினர்கள் பாராட்டினார்கள்.


Related Tags :
Next Story