சிதம்பரம் அருகேரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்மளிகைக்கடைக்காரருக்கு வலைவீச்சு


சிதம்பரம் அருகேரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்மளிகைக்கடைக்காரருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் வல்லம்படுகை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சிதம்பரம் அருகே வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவரது கடையை சோதனை செய்தபோது, கடையின் பின்புறம் வாடகைக்கு ஒரு வீட்டில் அறை எடுத்து அதில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 58 மூட்டைகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story