ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்


ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
x

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ்.கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் சோளிங்கரை அடுத்த ஆர்.கே.பேட்டையில் தொடங்கியது. இதனையொட்டி ஆர்.கே.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ..கே.நடராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஏ.என்.சரவணன், ஏ.என்.செல்வம், ஏ.என்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி வரவேற்றார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ரவிச்சந்திரன் ஆர்.கே.பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், துணைத்தலைவர் திலகவதி ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் வேணு, ஊராட்சி மன்ற துணை தலைவர் குமரேசன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரமிளா வெங்கடேசன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் பேசுகையில், ''நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சிறந்த சேவை செய்ய வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியுடன் ஆளுமை தன்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் எளிய வகையில் கல்வி கிடைத்திட வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி எஸ்.எஸ்.எஸ்.கல்லூரி. இதில் பயிலும் மாணவர்கள் எதிலும் எங்கும் வெற்றி பெற வேண்டும்'' என்றார்.இதனையொட்டி கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கே.வி.சிவக்குமார் நன்றி கூறினார். முகாம் வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story