ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் "இ்ந்திய பொருளாதாரத்தில் சமகால பிரச்சினைகள்" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி இந்திய பொருளாதாரத்தில் தற்போது காணப்படும் முக்கிய பிரச்சினைகளான மக்கள் பெருக்கம், குறைந்த தலைவீத வருவாய் மற்றும் சமூக பிரச்சினைகள் பற்றி கூறினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்றார். நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் வைஜெயந்தி சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கின் அமைப்பு செயலாளர் மருதையா பாண்டியன், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை இணை பேராசிரியர் சிவசங்கர், அம்பை கலை கல்லூரியில் பணிபுரியும் முனைவர் முத்து சுப்பிரமணியன் ஆகியோரும் பேசினர்.

கருத்தரங்கில் அனைத்து கல்லூரிகளிலும் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

இதில் மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆய்வு மாணவி நிவேதா, மதுரை பாத்திமா கல்லூரி உதவி பேராசிரியர் அனிதா, ஆதித்தனார் கல்லூரியின் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் செல்வம், ஞான அபினாஷ், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி உதவி பேராசிரியை கவிதா, முதலாமாண்டு பொருளியல் துறை மாணவி மதுபாலா ஆகியோர் சிறந்த ஆய்வு கட்டுரைக்கான பரிசு பெற்றனர். நடுவர்களாக பேராசிரியர்கள் மருதையா பாண்டியன், ஆரோக்கிய அமுதன் மற்றும் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் செயல்பட்டனர்.

பேராசிரியர்கள் பாலு, முத்துகிருஷ்ணன், ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட், ராஜேஷ் மற்றும் கோகிலா உள்பட பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் 21 கல்லூரிகளில் இருந்து 160 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். பேராசிரியர் கணேசன் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும் பெருமாள், சிவ இளங்கோ, சிவமுருகன், முருகேஸ்வரி, அசோகன் மற்றும் உமா ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story