மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்துகொண்டு, 96 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவினை கலெக்டர் வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) முருகேசன், மாவட்ட மனநல மருத்துவ அலுவலர் பிரபாவராணி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் ராஜேஷ், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story